சென்னை:
மூன்றே மாதங்களில் , 100 மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டுன் முதல் மூன்று மாதங்களில், 97 மின் வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளதாக மின்வாரிய வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.

மின்சாரம் தாக்கியவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டாங்கேட்கோ) தொழிலாளர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து டாங்கேட்கோ அமைப்பு செயலாளர் ஆர் முரளிகிருஷ்ணன் கூறுகையில், மாநிலம் முழுவதும் 9,523 கேங்மேன்களை டாங்கட்கோ நியமித்துள்ளார். கேங்மேனுக்கான தகுதி 4-ம் வகுப்பு என்றாலும் கூட, மின்வாரியத்தில் திறமை இல்லாத பொறியியல் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளை கேங்மேன்களாக நியமித்துள்ளனர். அவர்களால் வேலை செய்ய முடியாததால், களப்பணியாளர்கள் சிரமப்படுகின்றனர் என்று கூறினார்.

“கடந்த சில மாதங்களில் மொத்தம் 15 கேங்மேன்கள் உயிரிழந்து உள்ளதுடன், 85 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறிய அவர், டாங்கேட்கோ இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, ஊழியர்களுக்கு உடனடியாக முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.