சென்னை:
பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலேயே கிளம்பிவிட்டார். மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழ் பத்திரிக்கையில் அவரின் பெயரும் நீக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிமுக தொண்டர்கள் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதன் மத்தியில் அடுத்ததாக பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி அழைப்பிதழ் அனுப்பி ஏற்பாடுகள் செய்தாலும் வரும் 11ம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பு இல்லை என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையது அல்ல என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

பொருளாளருக்கு தான் சின்னமும் கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறினார். பொருளாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் இன்றி பொதுக்குழு கூட்டினால் அது செல்லாது என்றும் பைத்தியலிங்கம் கூறியுள்ளார்.