சென்னை: அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தி கே.எஸ்.அழகிரி உள்பட 300 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது, அரசியல் பழி வாங்கல் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இதையடுத்து, டெல்லி உள்பட  நேற்று நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதுபோல சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், அதன் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக   சாஸ்திரி பவனில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  உள்பட  300  காங்கிரஸார் மீது 2 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.