சென்னை

மிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு ஆனலைன் மூலம் மட்டும் வகுப்புக்கள் நடந்தன.   கொரோனா பாதிப்பு குறைந்ததால் வரும் நவம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடந்து வருகின்றன.   மாணவர்களுக்கு தற்போது அரையாண்டு விடுமுறை நடைபெறுகிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது   தவிர ஒமிக்ரான் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   இதனால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்தா ஆலோசித்து வருகின்றனர்.

தமிழக கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து, “தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் மிகவும் அச்சுறுத்தலாக விளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆகவே பள்ளி மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடத்த ஆலோசித்து வருகிறோம்.  விரைவில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.