சென்னை
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிகப்பட்டது குறித்து திமுக எம் எல் ஏ பொன்முடி கருத்து தெரிவித்துளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை குறித்து ஒரு சட்ட முன் வடிவும் பட்ட மேற்படிப்புக்காக மற்றொரு முன் வடிவும் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. அந்த வரைவில் தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கள் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோர்ப்பட்டிருந்தது.
தமிழகத்தின் அப்போதைய ஆளுநர் இந்த சட்ட முன் வரைவுகளை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி குடியரசு தலைவருக்கு அனுமதி கோரி அனுப்பினார். இந்த இரு மனுக்களுக்கு குடியரசு தலைவரின் அனுமதியை பெற்று தரவேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு கொடுத்து இருந்தார்.
இந்த சட்டவரைவுக்கு ஒப்புதல் கோரி தமிழ்நாடு மாணவர் மற்றும் பெற்றோர் சங்கம் சர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணையில் இவ்விரு மசோதாக்களையும் ஏற்கனவே குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இது குறித்த தேதி விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு இச்செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. இது குறித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, “நீட் தேர்வு விலக்கு குறித்த தமிழக அரசின் சட்ட மசோதா நிராகரிக்கப்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றாகும். மத்திய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு வருகிறது” என ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]