சென்னை: தன்மீதான ஊழல் குறித்து பேச தடை விதிக்கக்கோரி, அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிகளுக்கான ரூ.12 ஆயிரம் கோடி டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு அமைச்சர் வேலுமணி தான் காரணம் என்று அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது. அதுபோல, அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தன்மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்படாத நிலையில், தன்மீது ஊழல்குற்றச்சாட்டு குறித்து பேச தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக வீடியோ வெளியிட தடை கோரி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கொரோனா பீதிக்கு மத்தியில் ரூ. 12ஆயிரம் கோடி நெடுஞ்சாலை டெண்டர்… அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு