சென்னை
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைக்க தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.

இன்றி தமிழக சட்டசபையில் அமைச்சர் ரகுபதி,
“தமிழகத்தில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 12 தனியார் சட்டக் கல்லூரிகளும் உள்ளது. 48,550 மாணவர்கள் அரசு சட்டக்கல்லூரி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தற்காலிகமாக சட்டக்கல்லூரி துவங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதிநிலைக்கு ஏற்ப அரசு புதிய சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து முடிவு செய்யும்
காரைக்குடியில் சட்டக் கல்லூரி கட்டப்பட்டுவருகிறது. மேலும் அழகப்பாக கல்லூரியில் சட்டக் கல்லூரி உள்ளது. எனவே சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை
வழக்கறிஞர் ஸ்டாம்ப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பார் கவுனசில் மற்றும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களில் ஒப்புதல் உடன் தான் இந்த ஸ்டாம்ப் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
என அறிசித்துள்ளார்.
[youtube-feed feed=1]