சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 6ம் தேதி கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், இணை நோய்கள் காரணமாக தற்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.