புதுச்சேரி

மிழக அமைச்சர் மா சுப்ரமணியம் அதிக அளவிலானோர் விழ சாராயத்தால் உயிரிழந்த்தற்கு விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 பேரை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். \சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டறிந்தார்.

பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம்,

”கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 168 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற தயங்கிய 55 பேருக்கு மருத்துவமனை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஷ சாராயம் அருந்தியவர்கள் சிலர் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதே இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணம்.

விஷ சாராயம் அருந்தியதில் மூன்று பெண்கள் உட்பட 48 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 600 படுக்கைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.”

என்று கூறி உள்ளார்.