சென்னை
வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் இன்று தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி.
“வளி மண்டல மேலடுக்கில் வெப்பச் சலனம் காரணமாக உருவான காற்று சுழற்சி வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை நகரில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.
சென்னை நகர்ப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
இந்நிலை வரும் 5 ஆம் தேதி வரை தொடரக்கூடும்.
ஆகவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]