சென்னை:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மேகாலாயா உயர்நீதி மன்றத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது குறித்து  என்பது குறித்து இதுவரை தெரியாத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு பட்டியல் வெளியானது.

அதன்படி,  தஹில் ரமணி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியல் பட்டியலிடப்பட்டு இருந்தது.  ஆனால், அவர் பணிக்கு வராத நிலையில், நீதிபதி அக்னிஹோத்ரி அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை நீதிபதி ரஹில் ரமணியை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.