சென்னை

மிழகத்தில் பல ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதில்,

”தற்போதைய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளர் நந்தகோபால், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாறு ஆராய்ச்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆட்சியராக இருந்த அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், நில நிர்வாக இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனிஷ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (மேம்பாடு) மற்றும் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரி சித்ரா விஜயன், தமிழ்நாடு ஊரக மாற்றுத் திட்டத் தலைமைச் செயல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். தவிர அவர் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட இயக்குநராகவும் பணியாற்றுவார்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.