கோவில்பட்டி: தமிழகத்தில் மேலும் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசிடம், தமிழகத்திற்கு 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் 30 செவிலியர் கல்லூரி அமைக்க அனுமதி தர வேண்டும் கோரிக்கை மனு அளித்தார்.
Try to setup 32 more nursing training colleges in Tamil Nadu! Minister Ma. Subramanian informationதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்த தேவையான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனாவால், மத்திய குடும்பநலத்துறை அரசு செயலாளர் ராஜேஷ்பூஷன் ஆகியோரிடம் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை தொடர்பான கோரிக்கை மனுவை கடந்தவாரம் கொடுத்தார். அதில்,
மதுரை மாவட்டம், அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டடங்கள் சிதிலமடைந்துள்ள நிலையில் அதனை மறுகட்டமைப்பு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைக்க விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில், 27.01.2019 அன்று மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும்.
மருத்துவக்கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி நிறுவ ஒன்றிய அரசின் 60:40 என்ற பங்களிப்புத் திட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும்.
நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு மீது குடியரசுத்தலைவர் ஒப்புதலை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு செவிலியர் கல்லூரி நிறுவ நிதி வழங்க வேண்டும்.
உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவின் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பினை தொடர வழிவகை செய்ய வேண்டும்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளை கைவிடுமாறு தேசிய மருத்துவக்குழுமத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு தேசிய நல்வாழ்வு குழுமம், பிரதம மந்திரியின் ஆயூஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையம் ஆகியவற்றின் கீழ் 2022-2023 நிதியாண்டுக்கான முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
உள்பட பல்வேறு கோரிக்கைகளை கொடுத்துள்ளார்.