சென்னை

ரும் 2020-21 ஆம் வருடம் பள்ளி வேலை நாட்கள் குறைய உள்ளதால் பாடப்புத்த்கங்களில் உள்ள பாடங்களில் 30% குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக அதிக அளவில் பரவி வருகிறது.  இதனால் பள்ளிகள் அனைத்தும் இன்னும் திறக்கப்படவில்லை.   பத்தாம் வகுப்புக்குத் தேர்வு நடத்த இயலாத நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் பள்ளிகள் சமீப கால கட்டத்தில் திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.

எனவே இந்த வருடப் பள்ளி வேலை நாட்கள் மிகவும் குறையக்கூடும்.  மேலும் பள்ளிகள் திறந்த பிறகும் கொரோனா அச்சம் காரணமாகப் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.  அத்துடன் ஆசிரியர்களில் பலரும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிக்கு வந்து பாடம் எடுப்பதைத் தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எனவே மாணவர்கள் வசதிக்காகப் பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களில் 30% முதல் 50% வரைக் குறைக்கத் தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.   இது குறித்து ஆலோசனை வழங்க ஆசிரியர்கள், புத்தக எழுத்தாளர்கள், உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கபட்டுளது.   இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் 100க்கும் மேற்பட்டோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் எந்தெந்த பாடங்களை குறைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய உள்ளனர்.

இந்த வருடத்துக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விட்டன.  எனவே புதிய பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படப் போவதில்லை.   மாறாக நீக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு  விவரம் அளிக்கப்பட உள்ளது.   இந்த வருடத்துக்கு அவசியம் இல்லை என அறிவித்து நீக்கப்பட்டுள்ள பாடஙகளை ஆசிரியர்கள் நடத்த தேவை இருக்காது