சென்னை

மிழக அரசு மதுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

நேற்று இந்தியத் தேசிய உணவக சங்க சென்னை பிரிவு தொடக்க விழா நடந்தது.  இதில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.  அவர் தனது உரையில், “அரசின் தற்போதைய மது மற்றும் விநியோகக் கொள்கையில் நிறைய விரும்பத் தகாதவை உள்ளன.

எனவே நாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்.,ஆனால் மதுபானத் துறையின் சில்லறை விற்பனை அம்சங்களை நாம் கட்டுப்படுத்தாத வரையில், நமக்குத் தேவையான உலகளாவிய திறமைகளை ஈர்க்க முடியாது.

தற்போது நம்மிடம் உள்ள தற்போதைய கொள்கையால் மதுப்பழக்கத்தில் ஏதேனும் பெரிய குறைப்பை அடைகிறோமா அல்லது மதுவினால் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளில் ஏதேனும் ஒன்றை நாம் அடைகிறோமா, என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எனவே தமிழக அரசு தனது மதுக் கொள்கையை மறு பரிசீலனை செய்வது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறது   இது குறித்து அரசு தரப்பில் தீவிர விவாதங்களும் நடந்து வருவதால் விரைவில் மறுபரிசீலனைக்கு வாயப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.