சென்னை
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 நிதி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாணவர் சட்டப்படிப்பை முடித்த பிறகு பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்த பிறகே வழக்கில் வாதாட முடியும். அத்துடன் அனுபவமிக்க ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக இணைந்து பயிற்சி பெற்ற பிறகே தனியாக வழக்கறிஞர்களாக பணியாற்ற முடியும்.
இவ்வாறு முழு நேர வழக்கறிஞராகப் பணி புரிய ஒரு சட்டக்கல்லூரி மாணவருக்குக் குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதனால் பல ஏழ்மையான மாணவர்கள் இந்த 3 ஆண்டுகளில் போதிய நிதி வசதி இன்றி துயரம் அனுபவித்து வருகின்றனர்.
இதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.3000 நிதி வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்கள் பயனடைவார்கள் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.