சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையை போல காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வடசென்னை பகுயில் உள்ள காசிமேடு கடற்பரை ஆயிரம் கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன.   காசிமேடு கடற்கரை பகுதியில் நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம், உணவு கடைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. அதே போல் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பெசன்ட் நகர் பீச்’ஐப் போல மாற்றப்படும் ‘காசி மேடு பீச்’! ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியது சிஎம்டிஏ…