சென்னை: திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்;  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர், உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘தியேட்டர் களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அதை மீறி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. ஆன்லைன் மூலம் புதிய படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு பொதுமக்களுக்கு எந்தவொரு வசதியும் செய்து தரப்படுவது இல்லை. எ

னவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு விசாரித்து தமிழகஅரசுக்கு உத்தரவிட்டது.

அதில்,   தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல விதிமீறல்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த விதிமீறல்களை வணிகவரித் துறை மற்றும் தியேட்டர்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து, குறைந்த கட்டணத்தில் சினிமா பார்ப்ப தற்கான வசதியை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

கட்டண நிர்ணயம் என்பது வெறும் பேப்பர் அளவில் இருந்து விடக்கூடாது. 3 வாரங்கள் கெடு எனவே, இந்த விதி மீறல்கள் குறித்து கண்காணிக்க தனிக் குழுவை அரசு நியமிக்க வேண்டும்.

தியேட்டர்கள் தொடர் பான புகார்களை இக்குழுவுக்கு அனுப்புவதற்கான வழிமுறை களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது இந்தக் குழு முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகி றோம். தமிழக அரசு 3 வாரங் களுக்குள் இதற்கான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என கூறினர்.

ஆனால், தமிழ்நாடு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இதை நினைவூட்டி, மீண்டும் தேவராஜ் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். அதில், நீதிமன்ற உத்தரவுபடி, அதிக கட்டணம் வசூலிக்குப்படும் தியேட்டர்கள் குறித்து,  அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது . தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் , கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட தியேட்டர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை வோட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தமிழாக அரசு கண்காணிக்க வேண்டும்  என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது