சென்னை
தமிழக அரசு உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு நாடெங்கும் அமலில் உள்ளது. உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிடவும் விநியோக நிறுவனம் மூலம் வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவு வழங்கும் நிறுவனங்களான ஸ்விக்கி, ஸொமடோ, உபேர் போன்ற நிறுவனங்கள் இந்த பணியைச் செய்து வருகின்றன.
தமிழக அரசு இந்த நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி காலை உணவைக் காலை 7 முதல் 9.30 மணி வரையும், மதிய உணவு 12 முதல் 2.30 மணி வரையிலும் இரவு உணவை மாலை 6 முதல் 9 மணி வரையும் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.