சென்னை

து வாங்க ஆதார் கட்டாயம் என்னும் நிபந்தனையை தஓளர்த்த் வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்க்டைகல் திறப்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரபட்ட்து.  சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்க முடியாது எனவும் ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படி நடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.   அத்துடன் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம் எனவும் அரசுக்குக் கூறியது.

உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளில், ஒருவருக்கு 750 மிலி மது பானம் மட்டுமே வழங்க வேண்டும்.  அத்துடன் மது வாங்குபவர்கள் தங்கள் பெயர் முகவரி மற்றும் ஆதார அட்டையைக் காட்ட வேண்டும்.  இதன் மூலம் கூட்டமும் குறையும் அத்துடன் சட்டவிரோதமாக மது பானம் விற்கப்பட்டுக் கடத்திச் செல்வதும் குறையும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு இன்று உயர்நீதிமன்றத்துக்கு ஒரு இணைப்பு மனுத் தாக்கல் செய்தது.  அந்த மனுவில், “தற்போது மது விற்பனை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது.  வாடிக்கையாளர்கள் பலர் ஆதார இல்லாமல் வருகின்றனர்.  இதனால் கடைகளில் கூட்டம் அதிகம் கூடுகிறது. இதைத் தவிர்க்க ஆதார அவசியம் என்பதை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம் வரும 14 ஆம் தேதி அன்று தள்ளி வைத்துள்ளது.