சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2019 – 20ம் ஆண்டிற்கான ரூ.302 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விவசாயிகள், நெசவாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன், மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நியாய வலை கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகையை தமிழகஅரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கு 2019 – 20ம் ஆண்டிற்கான மானியைத் தொகை விடுவித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ரூ.302 கோடி மானியத்தொகை விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நியாயவிலை கடைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.