சென்னை

மிழக அரசு சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சென்னையில் விநாயர் சிலைகள் கரைப்பதற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில்,

* அனுமதித்த நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.

* அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

* 4 இடங்களில் கரைக்க 17 வழித்தடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும்.

* சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ, அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..

* சென்னை நகர எல்லையில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 15-ல் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* சிலை கரைப்புக்கு 16,500 காவல்துறையினர், 2,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.