சென்னை

டப்பு நிதியாண்டு எம் எல் ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ..351 கோடி விடுவித்துள்ளது.

இந்த 2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அந்த தொகையில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.