சென்னை

மிழகத்தில் பள்ளிகள் திறக்க தாமதம் ஆவதால் பாடங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.   இதனால் சென்ற ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.   கொரோனா தாக்கம் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படாமல் போனது.  இந்த வருடமும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவரக்ள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.    வகுப்புத் தேர்வுகள் மதிப்பெண் அடிப்படையில் பள்ளி இறுதி வகுப்புக்களுக்கு மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம், ” மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து துறைரீதியான ஆலோசனை நடந்து வருகிறது.  மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளையும்  அறிய வேண்டியது அவசியம் ஆகும். இதுவரை 3 மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதை போல் தமிழகத்திலும் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடங்களை  குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதை தவிர, தனித் தேர்வர்கள் 39,579 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் துணைத் தேர்வுகள் நடத்தப்படும். தனியார்ப் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி இந்த ஆண்டு வந்துள்ள மாணவர்களைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

உயர்நீதிமன்றம் தனியார்ப் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பள்ளிகள்:ள் அவற்றை முறையாகப் பின்பற்றிச் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாரங்களுடன் தனியார்ப் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண விவகாரத்தில், தனியார்ப் பள்ளிகளைத் தண்டிப்பதைவிட அறிவுறுத் தவே விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்..