சென்னை

மிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடெங்கும் கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் மூன்று தவணைகளுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு நிறுத்தி வைத்தது. அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிக அளவு தொகை செலவு செய்யப்பட்டது மற்றும் போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டதாகக் கூறியது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து இருந்து 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 28 விழுக்காடு உயர்த்தி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் மூலம் சுமார் 18 இலட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். அரசு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தை சந்திக்கும்.