சென்னை

மிழக அரசு சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இன்று கடந்த 11 ஆண்டுகளில் 5 ஆம் முறையாகச் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது..   இன்றைய இந்த கூட்டத்தில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே இதே மசோதா கடந்த 1 ஆம் தேதி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.  அமைச்சர் ஆளுநரின் மதிப்பீடுகள் தவறானவை எனக் கூறியதுடன் பல முறை நீட் தேர்வு எழுதுவோருக்கு மட்டுமே இந்த தேர்வு சாதகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த மசோதா மீண்டும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே அறிவித்தபடி இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இதுபோல் நிறைவேற்றி  ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் பிப்ரவரி 1 ஆம் தேதி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.