சென்னை: சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க  தமிழக அரசு அரசாணை அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது  அதன்படி, மாநிலங்களில் உள்ள 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஓசூர், தஞ்சையில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

[youtube-feed feed=1]