சென்னை
இஸ்லாமியராக மாறிய பி சி, எம் பி சி, மற்றும் எஸ் சி பிரிவினர் இட ஒதுக்கீட்ட்குக்காக பி சி எம் என்னும் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 வரை தமிழகத்தில் பிற மதங்களில் இருந்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள், இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்கள் ஏற்கனவே பெற்ற ஜாதி சான்றிதழ் மாற்றப்பட்டு, முஸ்லிம் ராவுத்தர் அல்லது லப்பை என்ற புதிய ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிமை அளிக்கப்பட்டது.
2012க்கு பிறகு மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இந்த சான்றிதழ் 2வழங்கப்படவில்லை. ஆகவே, முஸ்லிமாக மதம் மாறிய,பிசி, -எம்பிசி-எஸ்சி- எஸ்.டி.வகுப்பைச்சேர்ந்தவர்களை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினராகக் கருதி, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியதைஏற்றுதமிழக அரசு ஏற்று, அரசாணையை வெளியிட்டிருக்கிறது.
இந்த அரசாணையில் ,
”இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பிசிஎம் என சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.