கல்ப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகில் உள்ள வாயாலுரில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரம் கொண்டு தடுப்பு சுவர் காரணமாக, தற்போது பெய்து வரும் மழை காரணமாக நீரை சேமிக்க முடியாமல், தடுப்புச் சுவரைத்தாண்டி உபரி நீர் வீணாகி வருகிறது. மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தண்ணீர் வீணாவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் கடல் முகத்துவாரப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணுமின் நிலைய நிர்வாகம் ரூ.32 கோடி நிதியில் 5 அடி உயரத்தில் தடுப்புச்சுவரை அமைத்துக் கொடுத்தது. ஏற்கனவே பெய்த கனமழையின்போது 5 அடி உயரத் தடுப்புச் சுவரையும் கடந்து, பாலாற்று நீர் கடலில் கலந்து வீணானது. இதையடுத்து, தடுப்பு சுவரை மேலும் உயர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், கூடுதலாக படுகையில் தண்ணீர் சேமிக்க முடியும் என்று, அப்பகுதி மக்கள், மாநில அரசு மற்றும், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவந்தனர்.
ஆனால், இதுகுறித்து மாநிலஅரசோ, மாவட்ட ஆட்சியரோ கண்டுகொள்ளாத நிலையில், கடந்த ஆகஸ்டு மாதமும், அப்பகுதி மக்கள் மீண்டும் பொதுப்பணித்துறைக்கு நினைவூட்டியதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறி உள்ளனர்.
வாயாலுரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரானது சுமார்5 அடி உயரம் மட்டுமே. இதில் பல அடிகள் மணல் மூடியுள்ளதால், போதியஅளவிலான நீர் படுகையில் சேமிக்க முடியவில்லை. இருந்தாலும், படுகையில் நீர் சேமிக்கப்பட்ட பின்பு, கரையோரகிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. கல்பாக்கம் நகரியப் பகுதியின் குடிநீர் தேவையும் பூர்த்தியடைந்துள்ளது.
ஆனால், பாசனத்திற்கு தேவையான அளவுக்கு தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், தற்போதுள்ள தடுப்புச் சுவரை மேலும் சில அடிகள் குறைந்தது 2 அல்லது 3 அடியாவது உயர்தத வேண்டும் என பல முறை கேரிக்கை வைத்து வருகிறோ. ஆனால், இதுவரை, அணுமின் நிலைய நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தடுப்புச் சுவரை உயர்த்துவது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தறபோது, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைகாரணமாக, பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால், அதை சேமித்து வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தடுப்பு சுவரைத்தாண்டி செல்லும் தண்ணீர் அனைத்தும் கடலில் வீணாக கலந்து வருகிறது. எனவே மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவரை உயர்த்தி தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.