சென்னை
தமிழக அரசு ஏழைக்கு உதவுபவர்கள் கைகளைத் தட்டி விடுவதாகக் கமலஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரொனா அச்சுறுத்தலால் இந்தியா நாளை வரை 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உளது. இதனால் பலர் பணிக்குச் செல்ல முடியாததால் ஊதியம் இன்றி வாடுகின்றனர். இவர்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், திரைப் பிரமுகர்கள் எனப் பலரும் உதவி வருகின்றனர். இது மக்களுக்கு உதவியாக உள்ளது.
நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தனிப்பட்டோர், உள்ளிட்ட யாரும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களுக்கு நேரடியாக எந்த பொருளையும் வழங்கக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அரசின் இந்த அறிக்கையைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
” அண்டை மாநிலங்கள் சில COVID 19உடன் போராட தனியார்,இளைஞர்,ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டி விடுகிறது. வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.This is no time for commision or omission.People are watching”
எனப் பதிந்துள்ளார்.