சென்னை
தமிழக அரசு முதல்வர் விரிவான காப்பீடு திட்டப் பயனாளிகளுக்கான வருமான வரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கட்டணமில்லாமல் வழங்கும் திட்டம் முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும்.
இந்த திட்டம் தமிழக அரசால் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தியது. இந்நிலையில் இன்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்ட பயனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு வருடத்துக்கு ரூ.72000 ஆக உள்ளது. இந்த அரசாணை மூலம் முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.