சென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒன்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான கல்லூரி கல்வி இயக்குனரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஒற்றை சாளர முறையில், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல கலை அறிவியல் கல்லூரிகளிலும் கியூட் தேர்வுகள் நடத்தி அதன்மூலம் மத்தியஅரசு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை உயர்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம், மாணவர்கள் சேர்க்கைக்கு, ஒவ்வொரு கல்லூரிகளிலும் தனித்தனியாக விண்ணப்பிக்கும் நிலைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுவதுடன், விண்ணப்பத்திற்காக மாணவர்கள் செல்வு செய்ய வேண்டியி பல ஆயிரம் ரூபாயும் மிச்சமடையும்.
இதை கருத்தில்கொண்டு திமுக அரசு, ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை (Single Window System) நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.