சென்னை
ஊரடங்கால் தொழில் வர்த்தகம் முடங்கி பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு கட்டமாக நடந்து வரும் ஊரடங்கால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தகம் முடங்கியதால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதை ஒட்டி பல சிக்கன நடவடிக்கைஅக்ளை அரசு அறிவித்டுள்ள்து. அந்த அறிக்கையில் உள்ள முக்கிய விவரங்கள் பின் வருமாறு ;
வழக்கமான அலுவலக செலவுகளில் மொத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ள செலவினங்களில் 20% குறைக்கபபட்டுள்ள்து.
தவிர அலுவலகத்துக்கு மேஜை, நாற்காலி உள்ளிட்ட அலுவலக தேவைகளை வாங்குவதில் 50 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்
அரசின் விளம்பர செலவுகளை 25 சதவிகிதம் குறைத்துக் கொள்ள வேண்டும். நடைபெறும் ஒவ்வொரு அரசு நிகழ்வுகளிலும் சமூக இடைவெளிக்காகக் குறைந்த எண்ணிக்கையில் அழைப்புகள் அனுப்ப வேண்டும்.
அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகள், சால்வைகள், பூங்கொத்துகள் போன்றவைகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்க வேண்டும்
அதிகாரிகளின் உணவுச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொழுது போக்கு செலவுகளும் வெளிநாட்டுப் பயணங்களும் தடை செய்யப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செலவில் 50% செலவுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
அரசு பயன்பாட்டுக்கான இயந்திரங்கள் கொள்முதலில் 25% குறைக்கப்படுகிறது. சுகாதாரம், குடும்ப நலம், தீயணைப்பு, போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
புதிய வாகனங்கள் வாங்க முழுவதுமாக தடை விதிக்கப்படுகிறது. மருத்துவம், ஆம்புலன்ஸ்கள், காவல்துறை, தீயணைப்பு வாகனங்கள் பிரபலங்களின் பாதுகாப்பு, உள்ளிட்டவற்றுக்கு 50% விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை
அச்சடிக்கும் கட்டணத்தில் 25% குறைக்கப்பட வேண்டும்.
புதிய கணினி உள்ளிட்டவை வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மிகப் பழையதை மாற்ற அனுமதி உண்டு. இந்த செலவில் 25% குறைக்கப்பட்டுள்ளது.