சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக அரசு, பெண்களை கவரும் வகையில், தேர்தல் மகளிர் உரிமை திட்ட பெண்களுக்கு இந்த மாதம் ரூ.5000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் மாதம் ரூ.1000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதன்மூலம் சுமார் 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை அவர்களது வங்கிக்கணக்கில் ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டு உள்ளது. இது பெண்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் பணம் செலுத்த முடியாது என்பதால், இந்த மாதம் மற்றும் அடுத்த இரு மாதங்கள் என மூன்று மாதங்களுக்கு ரூ.3000 மற்றும் கோடை கால சிறப்பு தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். அதனால், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000; கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என ரூ.5ஆயிரம் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளதுடன், திராவிட மாடல் 2.0-ல் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
[youtube-feed feed=1]