சென்னை: மே மாத மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்  என முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த  மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகை யாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]