சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக  தோல்வி குறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் ஆலோசனை. மேற்கொண்டார்.

அப்போது, டீக்கடையில் பேசிய அரசியலை சமூக வலைதளத்தில் பேச வேண்டும் என்றும்,  சூரியன் ஒருபோதும் மறையாது  என்றும், திமுக தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,  திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது என்றும், சூரியன் ஒருபோதும் மறையாது, திரும்ப உதித்தே தீரும். திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. திமுகவுக்கும் தவெகவுக்குமான வாக்கு சதவீதம் வேறுபாடு என்பது 3.52 சதவீதம் தான். இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம் தேர்தல் தோல்வியை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றார்.

மேலும், தேர்தலில்  திமுக தோல்வி அடைந்ததற்கு  எங்க கோளாறு நடந்துச்சு? எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. கட்சி நிர்வாகிகள் மாற்றி மாற்றி குறை சொல்லிககொண்டே இருந்தால் அதற்கு முடிவே இருக்காது.

இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, ஏன் சோஷியல் மீடியாலயுமே, “எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச் சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்”-னு புலம்புறாங்க.  அதுமட்டுமில்ல, “இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன்.

சமூக வலைதளங்கள் மிகப்பெரிய களமாக உருவெடுத்திருப்பது இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. தொழில்நுட்பங்களை கையாள்வதில் திமுகவினர் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திமுகவினர் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் நேரடியாக பங்கேடுத்து செயல்பட வேண்டும். இனிமேல் நமது பரப்புரை ஸ்டைல், செயல்பாடுகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டும்

டீக்கடையில் பேசிய அரசியலை சமூக வலைதளத்தில் பேச வேண்டும் என்று வலியுறுத்தியவர், மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல. அதுக்காக மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிடக்கூடாது. எல்லாருமே முக்கியம்தான்.  ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம். ஒருவேளை யாராவது, ‘என்னால செயல்பட முடியாது’-னு நினைச்சா மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம்.

அரசியலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு ;பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல்.மற்றவர்கள் மாதிரி எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதியில் ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாமல் தோல்வியிலும் தைரியமாக இருந்தோம்.

என்னை பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன், உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறி உழைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை செய்தோம். தோல்விக்கு யாரையும் கைக் காட்டாதீர்கள், அடுத்தவர் மேல பழிபோடாதீர்கள். கட்சித் தலைவர்கள் என்ற முறையில் நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி. மாயாஜால ;சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்புஎன்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.

தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது.எங்க கோளாறு நடந்துச்சு? எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம். ஒவ்வொருத்தரும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தோல்விக்கான காரணங்கள் குறித்து தொகுதிவாரியாக, அனைத்து மட்ட நிர்வாகிகள் மத்தியிலும் கருத்து கேட்க வேண்டும். அவர்கள் குரலுக்கு நாம் காது கொடுக்க வேண்டும். அதற்காக தலைமை சார்பில் கள ஆய்வு குழு அமைக்கப் போகிறேன். அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து 20 நாள்களுக்குள் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள்.கட்சி தொண்டர் களின் கருத்துகளை பெறப் போகிறேன். அதற்காக தனி இணையதளம் நாளையே அறிவிக்கப்படும். அதில் அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

மக்களால் கொடுக்கப்படும் ஆலோசனைகள், கருத்துகளை வைத்து அமைப்பு ரீதியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்யவுள்ளேன். என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்

என்னால் அமைக்கப்படும் விசாரணைக்குழு, இணையதளம் மூலமாக திமுக தொண்டர்கள், மக்களால் தரப்படும் ஆலோசனைகளை வைத்து திமுகவின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய உள்ளேன்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]