சென்னை: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.‘

தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக பதவி ஏற்றது முதல், அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்  உளவுத்துறை டிஜிபி ஆக இருந்த பாலநாகதேவி, சைபர்கிரைம் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி டிஎஸ்பியாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை டிஜஜியாக தர்மராஜன் , சி.ஐ.டி. உளவுத்துறை டிஐஜியாக சரவணன், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பி.யாக கரட் கருண் உத்தவ்ராவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், பகேரியா செபாஸ் கல்யாண், மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செயயப்பட்டுள்ளனர்..

[youtube-feed feed=1]