சிவகங்கை: தவெக தலைவர்  விஜய்க்கு அதிமுக-வின் ஆதரவு தேவையில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், விஜய் தனித்தே ஆட்சி தருவார் என வக்காலத்து வாங்கி உள்ளார்.

108 இடங்களை பெற்ற தவெக தற்போது, திமுகவின் கூட்டணி கட்சிகள், மற்றும் அதிமுகவின் ஒருபகுதி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறார். இதனால், விஜயின் ஆட்சி காலம் எப்படி இருக்கும் என்பது, தலைக்குமேல் தொங்கும் கட்சியாக உள்ளது.

இந்த நிலையில்,  தவெக-விற்கு பல கட்சிகளின் ஆதரவு குறித்து பேசிய கார்த்தி சிதமபரம், “யாராவது தாமாக முன்வந்து ஆதரவு அளித்தால் யாரும் அதை மறுக்க மாட்டார்கள், விஜய்யின் அரசாங்கத்தில் அதிமுக-வின் பிளவுபட்ட குழுக்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை, தற்போது அவருக்கு இருக்கும் ஆதரவைக் கொண்டே, அவரால் ஒரு நிலையான அரசாங்கத்தைத் தர முடியும்” என்று கூறினார்.

மேலும் கூறியவர்,  “நான் இப்போதும் திமுக-வை மதிக்கிறேன். அது தமிழக அரசியலில் நீண்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு பெரும் அரசியல் சக்தி,திமுக-வுடன் நாங்கள் பல ஆண்டுகளாகப் பயணித்து, பல்வேறு தேர்தல்களில் இணைந்து வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், இந்தத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியுள்ளனர். விஜய்யின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் தெளிவான தீர்ப்பாக உள்ளது.”

புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கு நிர்வாகம் மற்றும் ஆளுமையைப் புரிந்துகொள்ளக் கால அவகாசம் தேவைப்படும். ராஜீவ் காந்தி, பிரதமர் மோடி போன்ற தலைவர்களுக்கே கூட பதவி ஏற்ற பிறகு நிர்வாகத்தைக் கற்கக் காலம் தேவைப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

[youtube-feed feed=1]