சென்னை: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை  மாலை திறக்கப்படுகிறது.   வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் நடை  திறந்து வைத்து  சிறப்பு வழிபாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (14-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் நடைபெற  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி திறந்து வைக்கிறார்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்க  5  நாட்களும்  கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த  5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (14-ந் தேதி) திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கிறது. இதையடுத்து, வரும் 19-ந் தேதி தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு வார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]