சென்னை: மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள  1,933 பொறியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்ப தேதி தொடர்பான  அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக  உள்ள அலுவலக உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகள் என மொத்தம் 1,933 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 9ந்தேதி முதல் மார்ச் 12ந்தேதி வரை வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, தகுதியுடையோர்,  www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்க லாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.