சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை 10% வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, 2.91 லட்சம் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், அதற்காக ரூ .210.48 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு பொதுத் துறை ஊழியர்களான அரசுப் போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தோட்டக்கழக ஊழியர்கள் 2,91,975 பேருக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
இவர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ. 210.48 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.