சென்னை
வரும் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.
நாளை நாடெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டது. தீபாவளிக்காக ஏராளமானோர் வெளியூருக்குச் செல்வதால் அவர்கள் திரும்பி வர வசதியாக இந்த ஒரு நாள் விடுமுறையை அரசு அறிவித்தது.
இந்நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சனிக்கிழமை அதாவது நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்தன. பல அரசு அலுவலகங்களில் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழக அரசு ஆசிரியர் சங்க கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.