சென்னை

மிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலைகளைக் கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு  பூஜைக்குப் பிறகு நீர்நிலைகளில்  கரைப்பது வழக்கமாகும்.  இந்த வருடம் விநாயகர் சிலைக் கரைப்பு இன்று நடைபெற உள்ளது.  இதையொட்டி தமிழக அரசின் மாசு கட்டுப்பட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில்,

களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவையால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்கவும்

சிலைகளைக் கரைக்கும் முன் அதிலுள்ள பூமாலைகள், துணிகள், இலைகள், அலங்கார தோரணங்களை அகற்ற வேண்டும்  

சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அலங்காரப் பொருட்கள் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும்

மீண்டும் பயன்படுத்தக் கூடிய துணி வகைகள் இருப்பின், அதை அனாதை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கலாம்

சிலைகளிலிருந்து அகற்றப்பட்ட துணிகள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் எரிக்க தடை

வீட்டில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை வாளியில் நீர் நிரப்பிக் கரைக்கலாம்

எனக் கூறப்பட்டுள்ளது.