சென்னை

மிழக அரசின் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான பொங்கல் பரிசு குறித்து  ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு

*’சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்குப் பொங்கல் பரிசு 

*’சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் 

*சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் 

*சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் 

*பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்’

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.