சென்னை: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடும் வகையில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழகஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

12ம் வகுப்பு மாணாக்கர்கள் உயர்கல்வி படிக்கும் வகையில், இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கிடும் வகையில், சாப்ட்வேட், ஹார்டுவேர் தயாரிபு நிறுவனமான HCL நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
[youtube-feed feed=1]