சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட்  விலக்கு மசோதாவுக்கு எக்காலத்திலும் கையெழுத்து இட மாட்டேன் எனக் கூறி உள்ளார்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது.  எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டசபையில் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது  அந்த மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை

இன்று தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ‘எண்ணித் துணிக’ என்ற நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் நடைபெற்றது.ஆளுநர் ஆர் என் ரவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவரின் தந்தை ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது ஆளுநர்,

 “நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறப் பயிற்சி மையம் இருந்தால் தான் முடியும் என்ற போலி பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தி உள்ளனர். எந்தக் காலத்திலும் நான் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எந்த காலத்திலும் கையெழுத்துப் போட மாட்டேன்.

இவ்வாறு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது, மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும்.  நான் எப்போதுமே நீட் தேர்வு தேவை என்பதில் உறுதியாக இருப்பேன்”

எனக் கூறி உள்ளார்.