
சென்னை
சென்னை இந்தி பிரசார சபை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் அதை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பாட வைத்தார்.
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது இந்தி பிரசார சபை. நேற்று இங்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்துக் கொண்டார். அப்போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப் பட்டது. அதன் பிறகு பட்டமளிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
அப்போது ஆளுனர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய பிறகு நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என குறிப்பிட்டார். அதன் பிறகு ஆளுனர் கூறியதன் பேரில் இந்தி பிரசாரசபையின் மாணவ மாணவிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை பாடினார்கள். பிறகு விழா தொடங்கி நடைபெற்றது.
Patrikai.com official YouTube Channel