திருநெல்வேலி
ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று நெல்லை பேருந்து நிலையத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.
சமீபத்தில், தமிழகத்தின் ஆளுனராக பதவி வகிக்கும் பன்வாரிலால் புரோகித் கோவையில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது மாவட்ட நிர்வாகம் பற்றி அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பின் அவர் கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு சென்றார். அங்கு சுத்தப் படுத்தும் பணியை செய்தார். கவர்னரின் இந்த நடவடிக்கைகள் கடும் சர்ச்சையை உண்டாக்கியது. கவர்னர் தேவை இல்லாமல் மாநில நிர்வாகத்தில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின.
இன்று திருநெல்வேலியில் மனோன்மணியும் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் கலந்துக் கொண்ட ஆளுனர் புரோகித் நெல்லை சந்திப்பில் உள்ள பேருந்து நிலையம் சென்றுள்ளார். அங்கும் சுத்தம் செய்யும் பணிகளை ஆராய்ந்து அவரே குப்பைகளை அகற்றி உள்ளார். அவருடன் நெல்லை ஆட்சியாளர் சந்தீப் நந்தூரியும் கலந்துக் கொண்டுள்ளார். அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது பற்றி அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.
அரசியல் பார்வையாளர்கள் அடுத்த பரபரப்பை கிளப்ப ஆளுநர் தயாராகி விட்டார் என இது குறித்து கருத்து கூறி உள்ளனர்.