சென்னை: கொரோனாவால் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படும். உள்ளாட்சி, வாரியம், பல்கலை., கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த ஆணை பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை ஒப்படைத்து, அதற்கான ஊதியத்தை பெறுவார்கள்.