சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருபவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நோய் தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு நன்கொடை அளியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் உள்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அதன்படி 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக மனமுவந்து நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அந்த பட்டியலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சக்தி மசாலா நிறுவனம் தலா 5 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், சிம்சன்ஸ் நிறுவனம் தலா 2 கோடி ரூபாய் தந்திருக்கின்றன. மற்ற நிறுவனங்களின் பட்டியல் விவரம் வருமாறு: